banner_04

நாங்கள்..


உதவி என்பது அதிகாரப் படிநிலைகளற்ற ஒத்த சிந்தனையுடைய நண்பர்களின் கூட்டுக்குழுமம். இது இலங்கை, ஜெர்மனி மற்றும் உலகமுழுதுமுள்ள இலங்கைத் தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களைக் கொண்டதொரு குழுமம். மதம், மொழி, இனக்குழு, சாதி, பாலினம், நிறுவன அதிகாரம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து, குழந்தைகளுக்கான கல்வி, பொதுக்கல்வி முதலிய குறிப்பிட்ட சமூகப்பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் தாமாக முன்வந்த நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு கூட்டுக்குழு.

 

2002 ஆம் ஆண்டில், இலங்கையில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நம்முடைய நடவடிக்கைகளைத் துவங்கியபோது, நம்மால் சிறுவர் இல்லங்களை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. அச்சமயம், பொருளாதாரக் காரணங்களால் பாதிப்புக்குள்ளாகிய, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர் இல்லங்களை நாம் தெரிவு செய்தோம்.

 

நண்பர்களின் அளித்த நிதியளிப்பினைக் கொண்டு, சிறுவர் இல்லங்கள் எதிர் கொண்ட அதி முக்கியத்தேவைகளான குழந்தைகளுக்கான உறைவிடம், உடை, உணவு, மருத்துவ உதவி ஆகியவற்றை மட்டுமே நம்மால் நிறைவேற்ற முடிந்தது.

 

2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போர் முடிவடைந்ததிலிருந்து, நம்முடைய நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இயங்கி வரும் சுதந்திரமான குழுக்கள், கேகாலிய மாவட்டம் நுவரெலியாவைச் சேர்ந்த கந்தோலயா தேயிலைத் தோட்டப்பள்ளி ஆகியவற்றை உள்ளடக்கியதாக விரிவடைந்தன. இப்பகுதிகளில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆளுகைத் திறன் வளர்ச்சி முதலியவற்றில் கவனம் செலுத்துவது நம்முடைய நோக்கமாக அமைந்தது.