உங்கள் பங்களிப்பு

January 22, 2016

39m vaddai

 

 

 

உங்கள் பங்களிப்புக்கு பிள்ளைகள் சார்பாக எமது நன்றிகள்.

நீங்கள் தரும் நிதியின் பயன்பாடு,  மற்றும் அனைத்து  நிதி விபரங்களையும் எந்நேரத்திலும் (24/7)  www.uthawi.net/donor  என்ற இணைய முகவரியில் பார்வையிடுவதற்கான  பயனாளர் விபரங்கள் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் கிடைக்கவில்லையாயின் மின்னஞ்சலில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

உங்களது நிதியால் பயன்பெறும் செயற்பாடுகள்:

*  சின்னஞ்சிறிய பூக்கள் நூல் வெளியீடு (பிள்ளைகள் எழுதிய ஆக்கங்களின் தொகுப்பு)

*  சந்தோசப்பொழுதுகள் ( பிள்ளைகள் / பெற்றோர்கள்  ஒன்றாகப் பங்குபற்றும் நிகழ்வு)

*  பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி

*  பாடசாலை ஆசிரியர்களுக்கான  நிதி

*  மாணவர் விடுதிக்கான நிர்வாக நிதி

*  உலக சினிமா செயற்பாட்டாளர்களுக்கான நிதி

*  கதை சொல்லல் செயற்பாட்டாளர்களுக்கான நிதி

*  மெல்லக் கற்றல் ஆசிரியருக்கான நிதி

*  க.பொ.த.சாதாரண வகுப்பு மாணவர்களுக்கான நிதி

உங்களைப் போன்ற தனிப்பட்ட நண்பர்களின் பெருந்தன்மையான ஆதரவினாலேயே எமது செயற்பாடுகள் தொடர்கின்றன.

 

IMG_2624நிதியின் நகர்வு

* ஜேர்மன் நண்பர்களால் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான Kriegswaisenhilfe Sri-Lanka e.V இன் வங்கிக்கணக்கிற்கு நண்பர்களின் நிதி வந்து சேருகிறது.

* வங்கிக்கூலியை இயன்றவரை குறைப்பதற்காக வருடத்தில் ஒரு முறை மட்டும் இலங்கையிலிருக்கும் உதவி. நண்பரின் வங்கிக்  கணக்கிற்கு நிதி அனுப்பப்படுகிறது.

* நிதி அனுப்புவதற்காகவும், கணக்கு வைத்திருப்பதற்காகவும் வங்கியால் அறவிட்டப்படும் கூலி மட்டுமே எமக்குக் கிடைக்கும் நிதியிலிருந்து உதவி. செயற்பாடுகளுக்கல்லாமல் எடுக்கப்படும் ஒரேயொரு செலவாகும்.

* இலங்கை வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் நிதி  நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

* செயற்பாடுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும் நிதி உரிய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை அந்தந்த இடங்களுக்கு போய் நேரில் பார்த்து உறுதி செய்து கொள்கிறோம்.

* செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துபவர்களினால் கணக்கு அறிக்கைகள் எமக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

* இலங்கையிலிருந்து வரும் கணக்கு அறிக்கைகள், இலங்கை வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டு, ஜேர்மன் வங்கிக் கணக்கின் பற்றுச்சீட்டுகள் என்பன   Kriegswaisenhilfe Sri-Lanka e.V அமைப்பினால் ஜேர்மன் நிதித்திணைக்களத்திடம் கண்காணிப்பிற்காக ஒப்படைக்கப்படுகிறது.

இவையனைத்துக்கும் மேலாக, இலங்கையில் உதவி.செயற்பாடுகள் நடைபெறும் இடங்களுக்கு வருவீர்களாயின், எங்களுக்குக் கிடைக்கின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா  என நேரில் பார்த்துக்/கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய வழி என்றும் திறந்தேயுள்ளது

எங்களுடன் இணைந்து பிள்ளைகளுக்கு ஆதரவளிப்பதற்காக உங்களுக்கு எமது நன்றிகள்.

அன்புடன்,
உதவி.நண்பர்கள்

3

உங்கள் உதவி

April 20, 2014