banner_04
நாங்கள் யார்

வறுமையால் கல்வி தடைப்படுவதை எங்களால் முடிந்தளவு தடுக்கும் முயற்சியில் இணைந்திருக்கின்றோம்.

இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயுமுள்ள நண்பர்கள் நாங்கள்.

இலங்கையில், குறிப்பாக தமிழ்ப்பகுதிகளில் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய இடங்களில் வாழுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தம் குடும்ப/பொருளாதார நிலைமையினால் கல்வியைத் தொடர முடியாமற் போகையில் எம்மால் இயலுமான உதவிகளைச் செய்து அவர்களது கல்வியைத் தொடரச் செய்வதன் மூலம் சமூக முன்னேற்றத்துக்கு உதவுதல் என்ற முயற்சியின் பொருட்டு இணைந்து செயற்படுகின்றோம்.

அரச/மத/இன/சாதி/பால் சார்பற்ற, நிர்வாக வடிவமற்ற, செயற்பாட்டு அடிப்படையிலான இணைப்பு மட்டுமே எமது அடித்தளம்.

இலங்கைக்கு வெளியே வாழுகின்ற நண்பர்கள் தருகின்ற நிதி மட்டுமே எமக்கான நிதிவளம்.

எம்முடன் தொடர்பு கொள்ள கடிதம் அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள்.

செயற்பாடுகள் இடம்பெறும் இடங்களுக்கு வருவீர்களாயின் அங்கு எங்களை நேரிலும் சந்திக்கலாம்.

 

செயற்படும் இடங்கள்:
கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், அரசடித்தீவு, மட்டக்களப்பு.
கந்தலோயா தமிழ் வித்தியாலயம், நாவலப்பிட்டி

 

Martin                                           Kabilan uthawi                 Kaushik Web
Kriegswaisenhilfe
Sri-Lanka e.V

 

தபால் முகவரி:
uthawi
postfach 1224
59889 Eslohe
Germany

 

மின்னஞ்சல்:
mail at uthawi.net